Published on 03/04/2021 | Edited on 03/04/2021

தமிழக சட்டமன்றத் தேர்தலும், கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று பதிவாகும் வாக்குகள் மே மாதம் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கிறது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தொகுதிப் பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை ஆகியவற்றை முடித்துக்கொண்டு தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
