Skip to main content

இரட்டை இலைக்கு லஞ்சம்...? டெல்லியில் டிடிவி.தினகரன்!

Published on 12/04/2022 | Edited on 12/04/2022

 

TTV

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணியாக பிரிந்த நிலையில் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியிருந்த பொழுது அந்த சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரன் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தோடு தினகரனை கைதும் செய்திருந்தார்கள்.

 

அதேவழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்கிற நபரும் கைதுசெய்யப்பட்டிருந்தார். இதுதொடர்பாக அமலாக்கத்துறை தனியாக வழக்கு ஒன்றை பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர், டிடிவி.தினகரன் குறித்து சில தகவல்களை விசாரணையில் தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில் கடந்த 8 ஆம் தேதி டிடிவி.தினகரனை நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் தினகரன் ஆஜராகினார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய கோபிநாத் என்ற வழக்கறிஞர் அண்மையில் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்