Published on 15/03/2021 | Edited on 15/03/2021

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் அனல் பறக்கிறது தேர்தல் பிரச்சாரம்.
இந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிகளைக் கவனத்திட மண்டலப் பொறுப்பாளர்கள், தொகுதிப் பொறுப்பாளர்களை தி.மு.க. தலைமைக் கழகம் நியமித்துள்ளது. அதன்படி, மத்திய மண்டலம்- மு.சண்முகம் எம்.பி., தெற்கு மண்டலம்- கனிமொழி எம்.பி., வடக்கு மண்டலம்- ஜெகத்ரட்சகன் எம்.பி., மேற்கு மண்டலம்- தயாநிதிமாறன் எம்.பி., சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளராக ஆ.ராசா எம்.பி. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.