ப.சி.க்கும் அவர் மகன் கார்த்திக் சிதம்பரத்துக்கும் மறுபடியும் சிக்கலை ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர். ஐ.என்.எக்ஸ். மீடியா தொடர்பான வழக்கில் ப.சி. கைதாகி, திகாரில் ஏறத்தாழ 3 மாதம் இருந்துவிட்டு அண்மையில்தான் வெளியில் வந்தார். அதற்குள் மீண்டும் கைது செய்ய, இன்னொரு வில்லங்க விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறது அமலாக்கத்துறை. கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமானங்களைக் கொள்முதல் செய்ததில் பெரும் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை ஒரு கோப்பை ரெடி பண்ணியிருப்பதாக சொல்லப்படுகிறது.
அப்போது, காங்கிரஸ் ஆட்சியில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த பிரபுல் படேல், விமானத்துறை அமைச்சராக இருந்தார். ஏர் இந்தியா நிறுவனத்துக்காக டிரீம் லைனர் விமானங்களைக் கொள்முதல் செய்திருக்கிறார்கள். வழக்கமாக லீசுக்கு எடுக்கும் இந்தவகை விமானங்களை, கொள்முதல் செய்வதற்கு அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் ஜெய்ராம் ரமேஷ் போன்ற அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்தும் கூட, கார்த்தி சிதம்பரம் நிறுவனம் ஒன்றின் டீலிங்கால் ட்ரீம் லைனர் விமானங்களையே கொள்முதல் செய்திருக்கிறார்கள் என்று கூறுகின்றனர்.
இந்த வகையில் மட்டும் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை சொல்கிறது. அதனால், இந்த ஊழல் விவகாரத்தில் ப.சி., அவர் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரைக் கைது செய்வதோடு, அடுத்தடுத்து அப்போதைய அமைச்சர் பிரபுல் படேல் மற்றும் சரத்பவார் ஆகியோரைக் கைது செய்யவும் அதிகாரிகள் ரெடியாக இருப்பதாக கூறுகின்றனர். அண்மையில் இது தொடர்பாக பிரபுல் படேலை விசாரித்த அமலாக்கத்துறையினர், ப.சி.யிடமும் அண்மையில் 6 மணி நேரம் விசாரணை நடத்தி இருப்பதாக கூறுகின்றனர்.