Skip to main content

காஷ்மீர் பெண்கள் குறித்து பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

Published on 07/08/2019 | Edited on 07/08/2019

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370- ஐ, 35A நீக்கும் மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று, மத்திய அரசு நீக்கியது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். மேலும் மக்களவை மற்றும்  மாநிலங்களைவையில் கொண்டு வந்து மசோதாவை நிறைவேற்றினார்.   
 

bjp



இந்த நிலையில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ விக்ரம் சயினி. தொண்டர்கள் மத்தியில் பேசும் போது, இப்போது முதல் நீங்கள் காஷ்மீரைச் சேர்ந்த அழகான பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். பாஜக அரசின் நடவடிக்கையால் இனி கட்சித் தொண்டர்கள் காஷ்மீருக்கு சென்று நிலம் வாங்கலாம் என்று பேசியுள்ளார். காஷ்மீர் பெண்கள் குறித்து பாஜக உறுப்பினர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சார்ந்த செய்திகள்