கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏழை நாடுகள், வளர்ந்த நாடுகள் என வேறுபாடின்றி அனைத்து நாடுகளையும் புரட்டிப் போட்டுள்ளது இந்த வைரஸ். அந்தவகையில் உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ள சூழலில், இந்தியாவில் இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600 ஐ கடந்துள்ளது. மேலும், இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க போலீசார் முக கவசம் அணிந்து ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோல் 1000 நண்பர்கள் ( புத்தகங்கள்) இருக்கும் போது தனிமை என்பதே கிடையாது pic.twitter.com/6BvonMbVNk
— H Raja (@HRajaBJP) March 25, 2020
இந்த நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா ஊரடங்கு உத்தரவு நேரத்தில் வீட்டில் இருந்து தனிமையை போக்குவது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், நோய் தடுக்க தனிமைப்படுங்கள் மனதால் ஒன்றுபடுங்கள். தேசம் காக்க தனிமைப்படுங்கள் அன்பால் பிரபஞ்சத்தின் எல்லைகளையும் கடந்து செல்லுங்கள். உலகம் வாழ தனிமைப்படுங்கள் உங்கள் உள்ளுக்குள் பயணப்படுங்கள். நேர்மறையாக சிந்தித்தால் தனிமை சாபமல்ல அது ஒரு வரம் என்றும், இன்னமும் 20 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டியுள்ளதால் நம் ஒவ்வொருவருக்கும் நம்மோடு இருக்கும் நண்பன் library தான். மாதிரிக்கு சில புத்தகங்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதுபோல் 1000 நண்பர்கள் ( புத்தகங்கள்) இருக்கும் போது தனிமை என்பதே கிடையாது என்றும் கூறியுள்ளார்.