Skip to main content

அதிமுகவிற்கு கண்டிஷன் போட்ட பாஜக... நீங்க நிற்கும் இடத்தில நாங்களும் நிற்போம்... கோபத்தில் அதிமுகவினர்!

Published on 19/12/2019 | Edited on 19/12/2019

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 91 ஆயிரம் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு வகுகிற டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.இதில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் திங்கள் கிழமையுடன் நிறைவடைந்தது. இதில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 335 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது. வேட்பாளர் பட்டியல் வெளியானதும் அரசியல் கட்சிகள், சுயேச்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும். மீதம் உள்ள மறுவரையறை செய்யப்படாத 9 மாவட்டங்களுக்கு 30 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. 
 

admk



இந்த நிலையில்  உள்ளாட்சித் தேர்தல் சீட் ஷேரிங்கை மையமாக வைத்து, கூட்டணிக் கட்சிகளுக்குள்ளும் உரசல் இருப்பதாக கூறுகின்றனர். பா.ஜ.க. சார்பில் அ.தி.மு.க.விடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எங்களுக்கு எல்லா மாவட்டத்திலும் உரிய இடத்தைக் கொடுத்தே ஆக  வேண்டும் என்ற கண்டிஷன் போட்டிருந்தார் என்று கூறுகின்றனர். அப்படி இருந்தும் புதுக்கோட்டை, ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. புள்ளிகள், நாங்க நின்னது போக மிச்சமிருக்கும் சீட்டைத்தான் தருவோம் என்று பா.ஜ.க. நிர்வாகிகளிடம் அதிகாரம் செய்ததாக கூறுகின்றனர். அதை ஏற்காத பா.ஜ.க. நிர்வாகிகள், நீங்க நிற்கும் இடங்களில் நாங்களும் நிற்போம் என்று அடம்பிடிப்பதாக சொல்கின்றனர். இதேபோல் பல இடங்களிலும் கூட்டணிக் கட்சிகளின் எதிர்பார்ப்பை அ.தி.மு.க. நிறைவேற்றாமல் இருப்பதால் கூட்டணி கட்சிகள் கோபமாக இருப்பதாக சொல்கின்றனர். 

 

சார்ந்த செய்திகள்