முதலில் தமிழை தமிழில் எழுத கற்றுக் கொள்ளவும். நான் 4 ஆண்டுகள் தான் ம.பி யில் இருந்தேன். இந்தியை இந்தியில் தான் எழுதுகிறேன். பிரதமர் சுயசார்பு பற்றி பேசியுள்ளது தங்கள் கட்சித் தலைவரை இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்த உங்களுக்கு வீணாக தோன்றுவதில் ஆச்சரியமில்லை. https://t.co/lJpI4EbD5p
— H Raja (@HRajaBJP) May 12, 2020
நேற்று இரவு 8 மணி அளவில் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றினார். அதில் பல்வேறு திட்டங்கள் குறித்தும், ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் பேசியிருந்தார். அதன்படி 20 லட்சம் கோடி ரூபாய்க்கு சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ளார். இது பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பொது முடக்கத்தை நீட்டிப்பதாகவும் அறிவித்துள்ளார். அந்த முடக்கம் எதுவரை தொடரும் என்று மே 18 ஆம் தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஊரடங்கு இதுவரை செயல்பாட்டில் இருந்து வந்த ஊரடங்கை விட மாறுதலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் இந்த உரைக்கு நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், "என் சமையலையாவது நேரத்துக்கு முடிச்சுருப்பேன்... என் நேரம் வீணாகப் போய்விட்டது" என்று ஆங்கில எழுத்துகளால் தமிழில் பதிவிட்டு இருந்தார். நடிகை குஷ்புவின் இந்தக் கருத்துக்கு பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில், "முதலில் தமிழைத் தமிழில் எழுத கற்றுக் கொள்ளவும். நான் 4 ஆண்டுகள் தான் ம.பி யில் இருந்தேன். இந்தியை இந்தியில்தான் எழுதுகிறேன். பிரதமர் சுயசார்பு பற்றி பேசியுள்ளது தங்கள் கட்சித் தலைவரை இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்த உங்களுக்கு வீணாகத் தோன்றுவதில் ஆச்சரியமில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.