விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் உள்ள என்எல்சி 2 வது சுரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. கடந்த இரண்டு நாட்களாக விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில் சூட்டிங் தளத்தில் இருந்து நடிகர் விஜயை சென்னை அழைத்து சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.அதனையடுத்து தற்போது இன்று மீண்டும் என்எல்சி 2 வது சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், என்எல்சி நிர்வாகம் மாஸ்டர் படத்திற்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்தது தவறு என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சரவணசுந்தரம் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருவருடைய உண்மையான பெயரைச் சொன்னதுக்கே வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவரெல்லாம் இப்ப என்ன ஆவார்களோ? உண்மை உண்மையா வெளிவருதே.
— H Raja (@HRajaBJP) February 6, 2020
இந்த நிலையில், நடிகர் விஜய் வீட்டில் ஐடி ரெய்டு குறித்து பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கிண்டல் செய்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், இலவச டிவியை வீசி எறிந்து படமெடுத்த வீரர் ஆயிற்றே. நேர்மை? என்றும், ஒருவருடைய உண்மையான பெயரைச் சொன்னதுக்கே வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவரெல்லாம் இப்ப என்ன ஆவார்களோ? உண்மை உண்மையா வெளிவருதே என்றும் கூறியிருந்தார். இதற்கு முன்பு நடிகர் ரஜினி சிஏஏ குறித்து பேசியதற்கு திரு.ரஜினிகாந்த் அவர்களின் கருத்து பாராட்டுக்குரியது என்று கூறியிருந்தார்.