குமரி மாவட்டம், மார்த்தான்டம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வில்சன். களியக்காவிளை காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் புதன்கிழமையான 08-ம் தேதி இரவு களியக்காவிளை சந்தைவழியில் இருக்கும் சோதனை சாவடிக்கு பணிக்கு சென்றார். அந்த சோதனை சாவடியில் மர்ம நபர்களால் அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சனின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறுக்கு பிறகு சொந்த ஊரான மார்த்தாண்டத்துக்கு போலிஸ் மரியாதையுடன் எடுத்து செல்லபட்டது. அங்கு உறவினா்கள் கண்ணீா் மல்க அஞ்சலி செலுத்தியதையடுத்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் குடும்ப கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னா் கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சோ்ந்த அப்துல் சமீம் (27), இளங்கடையை சோ்ந்த தவ்பீக் (27) ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதல்கள் மிகக்கடுமையாக இருக்கிறது. ஆகவே அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
— H Raja (@HRajaBJP) January 11, 2020
Watch : https://t.co/q3jAqSbyjB pic.twitter.com/zEHzuy9YkG
இந்த நிலையில் காவல் உதவி ஆய்வாளர் கொலை குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பேசி வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதல்கள் மிகக்கடுமையாக இருக்கிறது. ஆகவே அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றவாளி முஸ்லீமாக இருந்தால் எதிர்க்கட்சிகள் வாயில் பிளாஸ்டிக் போட்டு ஒட்டிப்பாங்க என்றும் கூறியுள்ளார். மேலும் காரைக்குடியில் இருக்கும் ஒரு கிறிஸ்தவ பாதிரியாரை கைது செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோவிற்கு சமூக வலைத்தளங்களில் பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே கன்னியாகுமரி களியக்காவிளையில் காவல்துறை துணை ஆய்வாளர் வில்சனை படுகொலை செய்துவிட்டு குற்றவாளிகள் மசூதியில் தஞ்சமடைந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது சிறுபான்மையினர் பற்றியும், எதிர்க்கட்சிகள் பற்றியும் கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.