Skip to main content

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சம்பவம் குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சை கருத்து!

Published on 10/01/2020 | Edited on 10/01/2020

குமரி மாவட்டம், மார்த்தான்டம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வில்சன். களியக்காவிளை காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் புதன்கிழமையான 08-ம் தேதி இரவு களியக்காவிளை சந்தைவழியில் இருக்கும் சோதனை சாவடிக்கு பணிக்கு சென்றார். அந்த சோதனை சாவடியில் மர்ம நபர்களால் அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சனின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறுக்கு பிறகு சொந்த ஊரான மார்த்தாண்டத்துக்கு போலிஸ் மரியாதையுடன் எடுத்து செல்லபட்டது. அங்கு உறவினா்கள் கண்ணீா் மல்க அஞ்சலி செலுத்தியதையடுத்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் குடும்ப கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னா் கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சோ்ந்த அப்துல் சமீம் (27), இளங்கடையை சோ்ந்த தவ்பீக் (27) ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

bjp

 


இந்த நிலையில் காவல் உதவி ஆய்வாளர் கொலை குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார்.அதில், கன்னியாகுமரி களியக்காவிளையில் காவல்துறை துணை ஆய்வாளர் முஸ்லீம் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை என்றும், கன்னியாகுமரி களியக்காவிளையில் காவல்துறை துணை ஆய்வாளர் வில்சனை படுகொலை செய்துவிட்டு குற்றவாளிகள் மசூதியில் தஞ்சமடைந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வில்சன் குடும்பத்தினருக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், 1947 - ல் மதத்தின் அடிப்படையில் நாடு பிளவுபடுத்த போதே சில நச்சு விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. வகுப்பு மோதல்கள் நடக்க துவங்கிய போது, சமாதானம் என்ற பெயரில் சிறுபான்மையினரை கண்டிக்க தவறியதும், அவர்களின் தவறுகளை கண்டிக்காமல், மேல் பூச்சு வேலையை செய்தது காங்கிரஸ் என்றும் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்