திமுக அமைப்பு செயளாலர் ஆர்.எஸ்.பாரதி கைது. வரவேற்கத்தக்கது. அடுத்து தயாநிதிமாறன் in Waiting list?. @polimernews @ThanthiTV @PTTVOnlineNews @sunnewstamil @news7tamil @News18TamilNadu
— H Raja (@HRajaBJP) May 23, 2020
கடந்த பிப்ரவரி மாதம் தி.மு.க. அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி, கலைஞர் வாசகர் வட்ட விழாவில் கலந்து கொண்டு பேசி இருந்தார். அப்போது அவர் நீதிபதிகள் நியமனம் தொடர்பாகத் தெரிவித்த கருத்துகள், தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதில் ஆர்.எஸ்.பாரதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. புகாரின் அடிப்படையில் சென்னை ஆலந்தூரில் உள்ள தனது விட்டில் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்குப் பின் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி நாகராஜன் வீட்டில் ஆர்.எஸ்.பாரதியை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட எழும்பூர் நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார், ஜூன் 1- ஆம் தேதி வரை ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், தி.மு.க. அமைப்புச் செயளாலர் ஆர்.எஸ்.பாரதி கைது. வரவேற்கத்தக்கது. அடுத்து காத்திருப்புப் பட்டியலில் தயாநிதிமாறன் (in Waiting list?). என்று குறிப்பிட்டுள்ளார். எச்.ராஜாவின் இந்தக் கருத்துக்கு தி.மு.க.வினர் பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.