டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்குள் முகமூடி அணிந்த குண்டர்கள் புகுந்து மாணவர்களையும் பேராசிரியர்களையும் தாக்கினார்கள். இதனையடுத்து குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்துப் போராட்டம் நடத்திய டெல்லி மாணவர்கள் மேலே மறுபடியும் குறி வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையில், முகமூடி அணிந்த மர்மநபர்கள் தாக்கியிருப்பது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்கின்றனர். பா.ஜ.க. ஆதரவு மாணவர் அமைப்பான ஏ.வி.பி.வி.யினர்தான் தாக்குதலை நடத்தியதாக மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழறிஞர் நெல்லை கண்ணனுக்கு எதிரா மெரினா காந்தி சிலையருகே பா.ஜ.க. தலைவர்கள் நடத்திய போராட்டம் பற்றிய செய்தி டெல்லி தலைமையை எட்டிய போது, மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா, பா.ஜ.க.வின் தேசிய செயல்தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட சீனியர்களோடு தீவிர அரசியல் ஆலோசனையில் இருந்ததாக கூறுகின்றனர். நம்மைப் பார்த்து தற்போது இந்தியாவே மிரண்டுபோய் உள்ளது. இந்த நேரத்தில் ஏழெட்டு பேர் போராட்டம் நடத்திக் கைதாகி, நம்ம கட்சியையே காமெடியாக்கிட்டு இருக்கிறார்கள். அவர்களை வார்ன் பண்ணுங்கள் என்று கோபப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, பொன்னாரையும் ஹெச்.ராஜாவையும் தொடர்புகொண்ட நட்டா, ரொம்பவே அவர்களைக் கடிந்துகொண்டதாகத் தகவல் வெளிவருகிறது.