சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் விடுதலைக்கு ஒப்புதல் வழங்க கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடைப்பெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், திமுகவைச் சேர்ந்த டிகேஎஸ் இளங்கோவன், மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.
ராஜீவ் கொலையில் 7 பேருக்கு தொடர்பு இல்லை. அவர்களை விடுதலை செய்ய வேண்டும். எனக்கு என் தாய் மாரியம்மாள்தான் தெய்வம். அவர் மீது ஆணையாக சொல்கிறேன், ராஜீவ் கொலையில் 7 பேருக்கு தொடர்பு இல்லை. 7 பேரை விடுவிக்காவிட்டால் ஆளுநர் மாளிகையைவிட்டு பன்வாரிலால் வெளியேற வேண்டும். 3 அப்பாவி மாணவிகளை எரித்துக் கொன்றவர்களை விடுதலை செய்யும் ஆளுநர், எந்த தவறும் செய்யாத 7 அப்பாவிகளை விடுதலை செய்ய மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.