Published on 17/07/2019 | Edited on 17/07/2019
வேலூரில் மறுபடியும் பணப்பட்டுவாடா புகார்களும் ரெய்டுகளும் தீவிரமாகியிருக்கு. இந்த முறையாவது தேர்தல் நடக்குமா என்று கேள்வி எழுப்புகின்றனர். கடந்த முறை மாதிரியே இப்பவும் தி.மு.க.வை குறி வச்சித்தான் ரெய்டு நடக்குதுனு வேலூர் அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தனக்கு அ.தி.மு.க. தரப்பு சரியா ஒத்துழைக்கலைங்கிறதை டெல்லி பா.ஜ.க.வரைக்கும் கொண்டு போக, அங்கிருந்து அ.தி.மு.க. தலைமைக்கு உத்தரவுகள் தரப்பட்டிருக்கு.
ஆனா, அ.தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி.க்களை பா.ஜ.க. தன் பக்கம் இழுக்க நடத்திவரும் பேரங்களால் அப்செட்டாகியிருக்கும் எடப்பாடியோ ஏ.சி.எஸ்.ஸை சரியா கண்டுக்கலை. அதனால, டெல்லி பா.ஜ.க. தலைமையே ரெய்டு மூவ்களுக்கு வியூகம் வகுத்துக் கொடுத்திடிச்சனு அரசியல் தரப்பு கூறிவருகின்றனர்.