தெலங்கானா மாநில கவர்னராக தமிழிசை பதவி ஏற்றுக்கொண்ட விழாவுக்கு, ஆளுங்கட்சி சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ் மட்டும் கலந்து கொள்வதாக சொல்லப்பட்டது. பின்பு அவரோட மூன்று அமைச்சர்கள் அந்த விழாவில் கலந்து கொண்டது அரசியல் பின்னணி இருப்பதாக சொல்லப்பட்டது. இது பற்றி அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது, தமிழிசை கவர்னராக பதவியேற்பு தொடர்பான விவகாரம் காரணமாக டெல்லியின் கடுமையான எச்சரிக்கையை அதிமுக அரசு எதிர்கொண்டது என்று கூறுகின்றனர்.
அதனால் டெல்லி பாஜக மனதையும், தமிழிசையின் மனதையும் சமாதானப்படுத்த தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகிய அமைச்சர்களையும் திடிரென்று தெலங்கானாவுக்கு அனுப்பினார் எடப்பாடி. டெல்லியின் எச்சரிக்கை பற்றி கேட்ட போது, முதல்வர் எடப்பாடி கடந்த 28-ந் தேதி வெளிநாடு சுற்றுப்பயணம் சென்ற போது, பாஜகவும், அதிமுகவும் கூட்டணிக் கட்சி என்கிற அடிப்படையில் அவருக்கு வாழ்த்துச் சொல்வதற்கு, அப்போது தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை கோட்டைக்கு சென்றுள்ளார். அங்கு இரண்டு மணி நேரத்துக்கு மேல் காத்திருந்தும் தமிழிசையை எடப்பாடி சந்திக்காமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதன் பின்பு தான் எடப்பாடியை சந்தித்து தமிழிசை வாழ்த்து கூறியிருக்கிறார்.
இதில் கடுப்பான தமிழிசை, இந்த விசயத்தை டெல்லிவரை எடுத்து சென்றுள்ளார். இதைக்கேட்டு டெல்லி பாஜக தலைமை மிகவும் எரிச்சலானதாக சொல்லப்படுகிறது. அதனால் "பாஜகன்னா உங்களுக்கெல்லாம் எளக்காரமா இருக்கான்னு" அங்கிருந்து கடுமையான குரலில் சொல்ல அதிமுக தலைமை அதிர்ந்து போனது. இதனால் ஷாக்கான எடப்பாடி, அப்படியெல்லாம் இல்லை என்று டெல்லி பாஜக தலைமையை சமாதானம் படுத்தியுள்ளார். பின்பு அந்த மூன்று அமைச்சர்களையும் ஓபிஎஸ் கூட அனுப்பி தமிழிசை பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. அதன் பின்பு அந்த விழாவில் அதிமுக அமைச்சர்கள் கலந்து கொன்டு பாஜகவின் தலைமையை சமாதானம் செய்ததாக கூறுகின்றனர்.