Published on 29/04/2019 | Edited on 02/05/2019
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான விடுதலைப் போராட்ட வீரர், தோழர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்து பொன். சண்முகவேலு என்பவர் இயக்கத்தில், ‘அதனால்தான் அவர் நல்லகண்ணு’ என்ற பெயரில் ஆவணப்படம் தயாராகி வருகிறது.

இந்த படத்தை இயக்குனர் சமுத்திரக்கனி தயாரிக்கிறார். இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா மே 1 ஆம் தேதி காலை சென்னையில் நடக்கிறது, இதை நடிகர் சூர்யா வெளியிடுகிறார், தோழர் நல்லக்கண்ணு பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படம் சினிமாவாக வெளிவருவது கம்யூனிஸ்ட் தோழர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.