“அன்புமணி என்றால் டீசண்ட் அண்ட் டெவலப்மெண்ட் பாலிடிக்ஸ் என்று நினைத்துக் கொண்டுள்ளார்கள். வேட்டிய மடிச்சு கட்டுனா...” என அன்புமணி ஆவேசமாகப் பேசியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் பாமக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், “என் கேள்வி என்னவென்றால் இன்னும் இரு வருடங்களில் தனியாரிடம் ஏன் எங்கள் மண் 25 ஆயிரம் ஏக்கரை வாங்கிக் கொடுக்கின்றீர்கள். 25 ஆயிரம் ஏக்கர் என்பது சாதாரணம் அல்ல. முப்போகம் விளையும் அந்த மண். எனக்கு இவர்கள் செய்வதை எல்லாம் பார்க்கும் பொழுது வயிறு எரிகிறது; கோபம் வருகிறது; ஆத்திரம் வருகிறது. உங்களுக்கு எப்பொழுது அது ஏற்படும்.
நான் சென்னையில் இருக்கிறேன். நமது மண்ணை எடுக்கிறார்கள் என்று எனக்கு கோபம் வருகிறது. கடலூர் மாவட்ட மக்களுக்கு எப்பொழுது கோபம் வரும். எவனோ ஒருத்தன் வட இந்தியாவில் இருந்து வந்து உங்களை அழித்துக்கொண்டு உள்ளான். வேலை கொடுக்கமாட்டேன் என்கிறான். தண்ணீரை எடுத்து ஊரை பாலைவனமாக மாற்றிக்கொண்டுள்ளான். எனக்கு என்ன என்று நீங்கள் இருக்கிறீர்கள்.
நீங்கள் வந்தாலும், வரவில்லை என்றாலும் நான் அங்கு சென்று போராடி ஒரு பிடி மண்ணைக் கூட எடுக்க விடமாட்டேன். என் மண் என் அடையாளம். இவர்கள் நினைத்துக் கொண்டுள்ளார்கள் அன்புமணி என்றால் டீசண்ட் அண்ட் டெவலப்மெண்ட் பாலிடிக்ஸ் என்று. வேட்டிய மடிச்சு கட்டுனா... ஏனென்றால், இது என் மண்; என் மக்கள்; என் வாழ்வாதாரப் பிரச்சனை” எனக் கூறினார்.