Published on 24/07/2024 | Edited on 24/07/2024
கலைஞர் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்திருப்பார் என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் அமலில் உள்ள 69% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்யும் சூழல் உள்ளது. 69% இடஒதுக்கீட்டின் மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது.
கலைஞர் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்திருப்பார். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி தமிழ்நாட்டின் சமூகநீதியைப் பாதுகாக்க வேண்டும். பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் இடம்பெற எங்களை 25 தொகுதிகளில் ஜெயிக்க வேண்டும்” என்று பேசினார்.