Skip to main content

பேராசிரியர் உடல் தகனம். கதறி அழுத திமுகவினர்..! (படங்கள்)

Published on 07/03/2020 | Edited on 07/03/2020

 

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் அவர் காலமானார். இந்தச் செய்தி திமுகவினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நள்ளிரவே அவரது உடல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. முக்கிய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தொண்டர்கள்,பொதுமக்கள் என அனைவரும் க.அன்பழகனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. வேலங்காடு மின் மயானத்தில அவரது உடல் தகனம் செய்யப்பட முடிவெடுக்கப்பட்டு அவரது உடல் உதய சூரியன் சின்னம் அலங்கரிக்கப்பட்ட மலர் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின், ஆ,ராசா, கவிஞர் வைரமுத்து, திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.  அதேபோல் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள், பொதுமக்கள் இந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். 

இறுதியாக ஊர்வலம் சரியாக மாலை 5.32 மணியளவில் வேலங்காடு மின் மயானத்தை அடைந்தது. அதன்பின் அவரது உடல் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின், கி.வீரமணி, திமுக பொருளாளர் துரைமுருகன், டிஆர்.பாலு, திருச்சி சிவா ஆகிய முக்கிய தலைவர்கள் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

 

 

 

சார்ந்த செய்திகள்