Skip to main content

திமுக ஆட்சி அமைக்க அமமுக ஆதரவு இல்லை!

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

சமீபத்தில் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுக ஆட்சியை திமுகவோடு சேர்ந்து அகற்றுவோம் என்று கூறினார்.இந்த நிலையில்  அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, திமுகவுக்கும் அமமுகவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அதிமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர எதிர்க்கட்சிகள் முயற்சித்தால் அமமுக ஆதரவு அளிக்கும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புரட்சிப் பெருந்தொகை என்று பட்டம் கொடுத்திருக்கலாம்.

 

ammk never support dmk parties


எந்த மதமாக இருந்தாலும் தீவிரவாதம் ஏற்க கூடியதல்ல. அனைத்து மதமும் அன்பைத்தான் கற்பிக்கிறது. எந்த மதமும் தீவிரவாதத்தில் ஈடுபடுங்கள் என்று யாரையும் கூறுவதில்லை. இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார். மேலும் திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் என அமமுக கொள்கை பரப்பு செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார். இதனால் அமமுகவுக்கும் திமுகவுக்கும் தொடர்பிருப்பதாக பல விமர்சனங்கள் அரசியல் கட்சியினரால் கூறப்பட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் அதற்கு விளக்கமளித்துள்ளார். மேலும் திமுக ஆட்சி அமைக்க அமமுக ஆதரவு கொடுக்காது என்றும் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்