Skip to main content

எடப்பாடி பழனிசாமிக்கு டி.டி.வி. தினகரன் கொடுத்த ஐடியா... உத்தரவு போடுவாரா இ.பி.எஸ்.?

Published on 04/06/2020 | Edited on 04/06/2020

 

ammk

 


உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் கோடைக்காலம் காரணமாகவும், கரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் வீட்டிலேயே அடங்கியிருப்பதால் மின்சாரப் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பலரும் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். 
 


இந்த நிலையில் அ.ம.மு.க. கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் மின்சாரக் கட்டணம் தொடர்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதில், கரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதாரப் பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வராததால், இரண்டு மாதங்களுக்கான மின் கட்டணத்தை முழுவதுமாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று @CMOTamilNadu கேட்டுக்கொள்கிறேன். குறைந்தபட்சம் 300 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்திற்காவது விலக்கு அளிக்க வேண்டும் என்றும், மேலும் தமிழகம் முழுவதும் மின் கட்டணத்திற்கான வரம்பை (Slab) நிர்ணயிப்பதில் குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் எழுந்திருக்கும் புகார்களின் மீது உரிய கவனத்தோடு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மின்வாரியத்தை வலியுறுத்துகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்