கடலூர் பாராளுமன்ற தொகுதிக்கு 41 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அம்மனுக்கள் மீதான பரிசீலனை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் அன்புச்செல்வன் முன்னிலையில் நடைபெற்றது.
தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ், பா.ம.க வேட்பாளர் இரா.கோவிந்தசாமி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சித்ரா உள்ளிட்டோரின் 23 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அதேசமயம் டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் கார்த்திகேயனை முன் மொழிந்தவர்கள் இருவரின் வாக்காளர் அட்டையில் மாறுதல் இருந்ததால் கார்த்திக் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அம்மனுவுடன் மேலும் 18 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
அதையடுத்து அ.ம.மு.க வேட்பாளருக்கு மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த சத்திரத்தை சேர்ந்த காசி தங்கவேலின் மனு ஏற்கப்பட்டதையடுத்து அவர் வேட்பாளராகவுள்ளார்.