டிடிவி தினகரனின் நெருங்கிய ஆதரவாளராக இருந்த தங்க.தமிழ்ச்செல்வன் சமீபத்தில் அவரது கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். அப்போது விரைவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அழைத்து தேனியில் பிரம்மாண்ட இணைப்பு விழா கூட்டத்தை நடத்துவேன் எனத் தெரிவித்தார். அதன் படி, தேனியில் தங்க தமிழ்ச் செல்வன் ஆதரவாளர்கள் மற்றும் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணையும் விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்று உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உண்மையான அதிமுகவினர் அனைவரும், இனி திமுகவில் இணைய வேண்டும் என தெரிவித்தார். மேலும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவினருக்கு மதிப்பு இல்லை என கூறிய ஸ்டாலின், தங்கத்தமிழ்செல்வனை ஏற்கனவே திமுகவில் தூண்டில் போட்டு இழுக்க முயற்சித்தோம். ஆனால் நடக்கவில்லை. தற்போது நடந்து விட்டது என தெரிவித்தார்.