Skip to main content

கட்சிக்காக பதவி விலக தயார்..! ஓ.பி.எஸ். பேச்சு! அதிமுக கூட்டத்தில் பரபரப்பு!

Published on 19/09/2020 | Edited on 19/09/2020
o panneerselvam

 

 

அ.தி.மு.க.வின் அவசர உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் 18.09.2020 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் உயர்மட்ட குழு நிர்வாகிகள், அமைச்சர்கள் பங்கேற்றனர்.

 

கூட்டத்தில் கே.பி.முனுசாமி, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ்பாண்டியன். தங்கமணி உள்ளிட்ட நிர்வாககிள் பேசினர். உடனடியாக அந்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்கவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, இப்போதைய நிலையில் அந்த குழுவை அமைக்க முடியாது என்று பேசினார். இதேபோல் தொடர்ந்து நிர்வாகிகள் பேசினார்கள். 

 

ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், கட்சி பணிகளை அனைத்து நிர்வாகிகளும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட முதல்-அமைச்சரிடம், ‘கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வாரம் இரண்டு முறை வந்து நிர்வாகிகள்-தொண்டர்களை சந்தித்து பேச உள்ளேன்’ என்று தெரிவித்தேன். உடனே முதல்-அமைச்சரும், அப்படியா... அப்போ நானும் வருகிறேன்’ என்றார். அதன் எதிரொலியாகத்தான் இந்த அவசர ஆலோசனை கூட்டமும் கூட்டப்பட்டு இருக்கிறது. 

 

கட்சி பணி என்பது மிக முக்கியம். கட்சிக்காக பதவி விலகி கட்சிப்பணியாற்ற தயார். என்னைப் போலவே 10 அமைச்சர்களும் பதவி விலகி கட்சிப்பணியாற்ற வேண்டும் என்று சொன்னேன். ஆனால் யாரும் அதற்கு முன்வரவில்லை. நமது பொதுக்குழு கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படி கட்சிக்காக 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை நியமிக்க வேண்டும். அந்த கூட்டத்தின் ஆலோசனையின்படியே கட்சியும், ஆட்சியும் நடக்கவேண்டும். கட்சியில் நாங்கள் மீண்டும் சேரும்போது இப்படித்தான் முடிவும் எடுக்கப்பட்டது. அதை ஏன் இன்னும் செய்யவில்லை? எனவே உடனடியாக அந்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்கவேண்டும் என்று வலுயுறுத்துகிறேன் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்