பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் தன்னுடைய தைலாபுரம் தோட்டத்தில் மலரும் மலர்கள், காய்கறிகள், பழங்கள் படங்களை ட்வீட் செய்துள்ளார். அதில் தைலாபுரம் தோட்டத்தில் முக்கனிகளில் இரு கனிகளைத் தரும் பலா, வாழை மரங்கள் என்று படங்களை வெளியிட்டிருந்தார்.
![dmk](http://image.nakkheeran.in/cdn/farfuture/P5mZSOk-IeTu9oNiDhLPNag_yUV43eZyFMkMjrugypk/1582878949/sites/default/files/inline-images/632_0.jpg)
ஐயா @drramadoss
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) February 26, 2020
முக்கணி - மா, பலா, வாழை.
பலா, வாழை உங்க தோட்டத்தில் இங்கே இருக்கு.
மா ? எங்கே ?
ஐயா உங்க தோட்டத்தில் கூட மாம்பழம் பழுக்கவில்லையா.?
என்ன ஐயா பண்ணலாம்.
சின்னத்தை மாற்றி விடலாமா.? pic.twitter.com/0rvFiMoVRp
பாமக நிறுவனர் ராமதாஸ் பதிவிட்ட இந்த புகைப்படத்திற்கு தருமபுரி தி.மு.க எம்.பி டாக்டர் செந்தில்குமார் கேள்வி எழுப்பும் வகையில் ட்வீட் செய்துள்ளார். அதில், முக்கனி - மா, பலா, வாழை. பலா, வாழை உங்க தோட்டத்தில் இங்கே இருக்கு. மா எங்கே? ஐயா உங்க தோட்டத்தில் கூட மாம்பழம் பழுக்கவில்லையா... என்ன ஐயா பண்ணலாம்... சின்னத்தை மாற்றிவிடலாமா" என்று கேட்டிருந்தார். இந்த பதிவிற்கு திமுகவினர் ஆதரவாகவும், பாமகவினர் எதிர்ப்பாகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் அன்புமணி ராமதாஸை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தி.மு.க எம்.பி டாக்டர் செந்தில்குமார் என்பது குறிப்படத்தக்கது.