Skip to main content

ஜெயக்குமார் கைதை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

Published on 24/02/2022 | Edited on 24/02/2022

 

 AIADMK announces protest against Jayakumar's arrest

 

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு வார்டில் கள்ள ஓட்டுப் போட முயன்றதாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரைத் தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

இந்த நிலையில், ஜாமீன் கோரி ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில்  நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். இதையடுத்து, ஜெயக்குமார் தரப்பு, அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தற்போது மனுத் தாக்கல் செய்துள்ளார்.  இதற்கிடையே தேர்தல் நாளன்று சாலை மறியல் செய்ததாக ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த வழக்கில் தற்போது ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இதற்கிடையே ஜெயக்குமார் கைதை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் வரும் 28ம் தேிதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்