அ.தி.மு.க. எம்.பி.க்களே எடப்பாடிக்கு டெல்லியில் இருந்த படியே ஷாக் கொடுப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 7-ந் தேதி ராஜ்யசபாவில் பேசிய அ.தி.மு.க. எம்.பி விஜயகுமார், திடீர் என்று, நாடு தழுவிய மதிய உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயரை வைக்கவேண்டும் என்று குரல் கொடுத்தது மட்டுமில்லாமல், காஷ்மீர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை குமரியில் தொடங்குவதால், அங்கே காமராஜருக்கு 1000 அடி உயரத்தில் மெஹா சிலை ஒன்றை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் பேசியது பலரையும் திகைக்க வைத்துள்ளது என்கின்றனர். இதனால் எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்கின்றனர்.
மேலும் விஜயகுமார் தனது குமரி மாவட்ட மக்கள் கொடுத்த கோரிக்கை கடிதத்தை பிரதமர் அலுவலகத்தில் கொண்டு சென்று கொடுத்துள்ளார். பிரதமர் அலுவலகமோ, இதை அப்படியே ராஜ்யசபாவில் பேசுங்கள் என்று கூறியுள்ளது. அதன்படியே விஜயகுமார் செயல்பட, நம்ம எம்.பி.க்களும் அவங்க ரிமோட்டிலா?ன்னு எடப்பாடி அதிர்ச்சியில் இருப்பதாக கூறுகின்றனர்.