வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5 தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதிமுக, திமுக சார்பாக கடந்த முறை போட்டியிட்ட ஏ.சி சண்முகம் மற்றும் கதிர் ஆனந்த் ஆகிய இருவரும் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளில் உள்ள முஸ்லிம் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் என்று கூறப்படுகிறது. முத்தலாக் விவகாரத்தில் அதிமுகவின் இரட்டை நிலை காரணமாக பெரும்பான்மையாக உள்ள முஸ்ஸிம் சமூதாய வாக்குகள் திமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு வாக்குகள் அந்த அணிக்கு செல்லும்போது அதிமுகவின் வெற்றி கேள்விக்குறியாகும் எனக் கூறப்படுகிறது.
அதையும் தாண்டி அதிமுக வழக்கமான வாங்கும் வாக்கு சதவீதத்தைக் கூட நாடாளுமன்ற தேர்தலில் வாங்க முடியாமல் போனதுக்கு பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்ததே காரணம் என்று கூறப்படுகிறது. கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்ததே காரணம் என்று சொல்லப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் இதுகுறித்து பேசிய அமைச்சர் சி.வி சண்முகம் அதிமுக சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்ததற்கு பாஜகவோடு கூட்டணி வைத்ததுதான் காரணம் என்று பேசி சர்ச்சைகளைக் எழுப்பினார்.
இதையடுத்து இப்போது வேலூர் தொகுதியில் இஸ்லாமியர்களின் வாக்குகள் திமுகவுக்கு செல்வதைத் தடுக்கும் பொருட்டு 11 சுயேட்சை இஸ்லாமிய வேட்பாளர்களை அதிமுக களமிறக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வியூகம் அதிமுகவுக்கு வெற்றியைக் கொடுக்குமோ இல்லையோ திமுகவிற்கு செல்லும் வாக்குகளைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.