வரும் மே 19ஆம் தேதி தமிழகத்தில் அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம்,ஓட்டப்பிடாரம்,சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இந்த நிலையில் அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் தமிழக சட்டப்பேரவை தலைவர் தனபால் அதிமுக எம்.எல்.ஏ மூன்று பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.அப்போது அவர் அளித்த பேட்டியில் லோக்சபா தேர்தலின் போது, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை செல்போனில் தொடர்புகொண்டு , 'தேர்தலை நிறுத்த பரிந்துரை செய்வேன்' என, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக, தம்பிதுரையின் குரலை எதிரொலித்தார்.தோல்வி உறுதி என்பதை அறிந்த தம்பிதுரை, தேர்தலை நிறுத்த, அரசு அதிகாரிகளை பயன்படுத்தினார். அதற்காக, அவர்கள் செய்தது தான், வெங்கமேட்டில் ஏற்பட்ட வன்முறை. அதை, தி.மு.க.,வினர் தவிர்த்து விட்டனர்.ஆளுங்கட்சியான, அ.தி.மு.க.,வினர், அரவக்குறிச்சி தொகுதி தேர்தலை தடுத்து நிறுத்த, ஒத்தி வைக்க தீவிரம் காட்டுகின்றனர்.லோக்சபா தேர்தல் முடிந்த மறுநாளே, தி.மு.க., தேர்தல் பணிகளை துவக்கி விட்டது. 60 சதவீத இடங்களில், ஓட்டு கேட்டு விட்டோம். ஆனால், அ.தி.மு.க.,வினர் தாமதமாக தேர்தல் பணியை ஆரம்பித்துள்ளனர்.
தேர்தல் ஆணையம் நியாயமாக, சுதந்திரமாக, அரவக்குறிச்சி தேர்தலை நடத்த வேண்டும். மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்ற வேண்டும் என, தி.மு.க., மனு கொடுத்துள்ளது. அவரை, தேர்தல் ஆணையம் மாற்றும் என நம்புகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.இது பற்றி அப்பகுதி மக்களிடையே விசாரித்த போது செந்தில்பாலாஜிக்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருப்பதால் அவர் வெற்றிபெறுவது உறுதி அதனால் ஆளுங்கட்சி தரப்பு தேர்தலை நிறுத்த சதி செய்கிறது என்று செந்தில்பாலாஜி கூறிய அதே கருத்தை மக்கள் தெரிவித்தனர்.