வரும் சட்டமன்ற தேர்தலை பிரசாந்த் கிஷோருடன் இணைந்து தி.மு.க. சந்திக்கும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இதுபற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். தி.மு.கவிற்கு ஆலோசனைகளைக் கூற நியமிக்கப்பட்டிருக்கும் பிரசாந்த் கிஷோர் டீம் பல்வேறு அதிரடி மாற்றங்களை திமுகவில் கொண்டு வர திட்டம் போட்டு வருவதாக சொல்கின்றனர். குறிப்பாக வரும் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருவதாக சொல்கின்றனர். சமீபத்தில் நடந்த ஆந்திரா சட்டசபை தேர்தலிலும்,டெல்லி சட்டமன்றத் தேர்தல் ரிசல்டிலும் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து பிகேவின் அடுத்த வியூகம் தமிழகத்தில் திமுக கட்சிக்கும், மேற்கு வங்காளத்திற்கு மம்தா கட்சிக்கும் ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.
![dmk](http://image.nakkheeran.in/cdn/farfuture/Qzwjlp1b6uhzK1fl5Cz8SmnfJv7oC7s0Q66TzkRxBHw/1582365210/sites/default/files/inline-images/177_5.jpg)
இதனால் தமிழகத்தில் பிரசாந்த் கிஷோரின் வியூகத்தை அறிந்து அதை முறியடிக்கும் முயற்சியில் அதிமுகவும் புதிய திட்டத்துடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. பிரசாந்த் கிஷோரின் நிறுவனம் போல் தமிழகத்தில் புதிதாக மற்றொரு கார்ப்பரேட் நிறுவனம் வருகை தந்துள்ளதாக கூறுகின்றனர். அதாவது, டெமோஸ் இந்தியா என்ற கார்ப்பரேட் நிறுவனம் 2021 சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் களத்தில் தனது பணியைத் தொடங்கிருப்பதாக சொல்கின்றனர். இதுதொடர்பாக அரசியல் களத்தில் பணியாற்ற ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தையும் வெளிப்படையாக வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் ஆளும் அதிமுக அரசுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிமுக தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் புதிய வியூகத்துடன் களமிறங்க தயாராகி விட்டதாக சொல்கின்றனர்.