கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடந்து முடிந்தது.இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திமுகவிற்கு ஆதரவு அதிகமாகவும், அதிமுக கட்சிக்கு சற்று பின்னடைவும் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் வரும் மே 19ஆம் தேதி நடக்கவிருக்கும் நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் மக்கள் அதிமுகவுக்கு எதிரான மனநிலையில் உள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன இதனால் திமுக உற்சாகத்தில் இந்த நான்கு தொகுதிகளில் அதிமுக கட்சிக்கு முன்னதாகவே தேர்தல் வேலைகளில் இறங்கிவிட்டனர்.
இதனிடையே சூலூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக பொருளாளர் இடைத்தேர்தலில் வெற்றியை கொடுங்கள் அதிமுக ஆட்சியை நான் மாற்றி காட்டுகிறேன் என்று கூறினார். மக்களும் மே 23ஆம் தேதிக்கு பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றங்கள் நிகழும் என்று கருதுகின்றனர். எனவே திமுக ஆட்சியை பிடிப்பதில் மிகுந்த உத்வேகத்துடன் உள்ளது. இதற்கு திமுக கட்சியில் உள்ள 88 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் போதாது கூட்டணி கட்சியில் இருக்கும் காங்கிரஸில் உள்ள 8 எம்.எல்.ஏ.க்களும், முஸ்லீம் லீக் கட்சி ஒரு எம்.எல்.ஏ ஆதரவும் கொடுத்து பின்பு இடைத்தேர்தலில் 22 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தால் திமுக ஆட்சியை பிடித்து விட முடியும்.
இந்த நிலையில் அதிமுகவில் இருக்கும் ஒரு சில அதிருப்தி எம்.எல்.ஏ .க்களை இழுக்கவும் திமுக முடிவு செய்து உள்ளதாம்.இதற்கு அதிமுக முன்னணி தலைவர்களே ஒரு சிலர் உதவி வருகிரார்களாம். இதற்கு காரணம் என்னவென்று விசாரித்த போது எம்.பி தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் தங்களுக்கும் தாங்கள் பரிந்துரைத்தவர்களுக்கும் வாய்ப்பு தராமல் போனதும் உட்கட்சி பூசல் அதிகமானதும் காரணம் என்று கூறப்படுகிறது. இதை உளவுத்துறை மூலம் அறிந்த எடப்பாடி பழனிச்சாமி யாரெல்லாம் அதிருப்தியாக இருக்கிறாங்க என்று தனது நம்பிக்கைக்கு உரிய அமைச்சர்கள் மூலம் கண்டறிந்து அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்யுமாறு சொல்லிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.