அதிமுகவில் உட்கட்சி மோதல் பூதாகரமாக வெடித்துள்ளது. ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இரட்டை தலைமையின் காரணமாக கட்சியின் ஒருமித்த கருத்தை கொண்டு செல்லமுடியாமல்; கட்சி யார் சொல்வதை கேட்பது என்று தெரியாமல் தடுமாறி வருகிறது. அதற்கான முடிவாகத்தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல் ஒற்றத்தலைமை என்ற கோரிக்கை தற்போது அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதிமுக பொதுக்குழு வருகின்ற 23ம் தேதி சென்னையில் நடைபெறும் நிலையில், இது குறித்து விவாதிக்க தலைமை கழக நிரவாகிகள், மா,செக்கள் கூட்டம் தலைமை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. 4 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒற்றைத் தலைமை பற்றிய பேச்சுகள் எழுந்துள்ளன.
யார் அந்த ஒற்றைத் தலைமை என்ற விவாதம் சென்றுகொண்டு இருந்த நிலையில், இருதரப்பிலும் விவாதம் களைகட்டியுள்ளது. ஆரம்பக்கட்டத்தில் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக இருந்தவர்கள் எடப்பாடியின் பக்கம் சாய்ந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட சிலர் மட்டுமே பேசியுள்ளனர். அவர்களைத் தவிர கே.பி. முனுசாமி உட்பட மூத்த நிர்வாகிகள் அமைதி காத்து வந்துள்ளனர். அதேபோல அசோக், அலெக்ஸ் ராமசந்திரன் உள்ளிட்ட சிலர் இருவரில் யார் வந்தாலும் பரவாயில்லை. கட்சி வளர்ந்தால் போதும் என்றபடி பேசியதாக சொல்லப்படுகிறது.
அதிமுகவில் எடப்பாடிக்கு 80 சதவீதமும், ஓபிஎஸ்க்கு 20 சதவீதம் ஆதரவு உள்ளதாக அக்கட்சியினர் பேசிக்கொள்கின்றனர். இப்படி போனால் வேற வழி என்ன என்பதை ஆலோசிப்பதற்கே இன்று ஒபிஎஸ் தனது இல்லத்தில் கூட்டம் ஒன்றை நடத்தினாராம்.