ஒற்றைத்தலைமை குறித்த சர்ச்சை பெரிதாக எழுந்ததால் இன்று அதிமுக அனைத்து நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நீண்டநாட்கள் கழித்து எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் ஒன்றாக கலந்துகொண்டனர். இந்தக் கூட்டம் முடிந்தபின்பு 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் ஒன்று பிரதமரை வழிமொழிய வாய்ப்பளித்த பாஜகவிற்கு நன்றி என்பது. இது பலரை அதிர்ச்சியடைய வைத்தது. இந்த இடத்தில், இந்த தீர்மானம் தேவையா எனவும் கேள்வியை எழுப்பியது.
அதிமுக கட்சியை வலுப்படுத்த 15 பேர்கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்தக்குழு ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களையும் பெற்றதாக இருக்கும் என்றும், ஏற்கனவே 4 பேர்கொண்ட வழிகாட்டுதல் குழு இருக்கிறது, அத்துடன் இந்த 11 பேருடன் இணைந்து மொத்தம் 15 பேர் இருப்பார்கள் என்றும், இதில் மூத்த அதிமுக நிர்வாகிகள் பங்குபெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டம் குறித்து யாரும் வெளியே பேசக்கூடாது, கருத்து கூறக்கூடாது என கூறியதால் நிர்வாகிகள், அமைச்சர்கள் உட்பட யாரும் கருத்து கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.