Skip to main content

மூன்று மணி நேரம் செலவு செய்ய மாட்டாரா? கமல் குறித்து நடிகை கஸ்தூரி சர்ச்சை கருத்து! 

Published on 04/03/2020 | Edited on 04/03/2020

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் மூன்று பேர் இறந்தது தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், "இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்ததை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் எடுத்துக் கூறினேன். விபத்தில் உயிர் தப்பியோரில் நானும் ஒருவன்; இறந்த மூன்று பேருக்கு செய்யும் கடமையாக கருதி ஆஜராகி விளக்கமளித்தேன். சினிமாத்துறையில் மீண்டும் விபத்து ஏற்படாமல் தடுப்பது குறித்து போலீசாரிடம் ஆலோசனை செய்தேன்." இவ்வாறு பேசினார்.

 

actress

 


பின்பு கமலின் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் தங்கள் தலைவரிடம் 3 மணி நேரம் விசாரணை செய்த போலீசாருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. கமலஹாசனின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் தமிழக அரசு போலீசார் மூலம் விசாரணை என்ற பெயரில் அவமதிப்பதாகும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் நடிகர் கமல் விசாரணைக்கு சென்றது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், 3 மணி நேரம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்ததுக்கே அரசாங்க சதின்னு அலுத்துக்கொள்வது  கமலுக்கும் கட்சியினருக்கும் அவப்பெயரை தேடித்தரும்.  மூன்று உயிர்களுக்கு தலா  ஒரு மணி நேரம் கூட செலவு செய்ய மாட்டாரா கமல் என்ற கேள்வி வரும் என்று கமலுக்கு நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்