Skip to main content

கேலி பேசுவதே அவரது வேலை... ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் எம்.பி காட்டம்!

Published on 25/04/2020 | Edited on 25/04/2020


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,077- லிருந்து 24,506 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 718- லிருந்து 775 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,749- லிருந்து 5,063 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 6,817 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 840 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 301 பேர் உயிரிழந்துள்ளனர்.
 


 

 

admk



இந்த நிலையில்  கரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்காக நடத்திய ஆய்வு கூட்டத்தில் தேனி மக்களவை எம்.பி.ரவீந்திரநாத் குமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் R.P. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது தேனி எம்.பி ரவீந்திரநாத் குமார் பேசும் போது, தேனி மக்களவை தொகுதியில் 6 சட்டமன்றத் தொகுதி உள்ளது சோழவந்தான் தொகுதியில் தான் கரோனா தொற்று பரவவில்லை வாழ்த்துகள் என்றார்.

மேலும் வளர்ச்சியடைந்த நாடுகள் கரோனா பாதிப்பிலிந்து மீள முடியவில்லை இறப்பு விகிதம் அதிகமாகி கொன்டே போகிறது. ஆனால் இந்திய நாட்டில் நமது பாரத பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கை அமல்படுத்தி கரோனா பாதுகாப்பைப் பலப்படுத்தி நோய்ப் பரவாமல் தடுப்பதற்கு முழு வீச்சில் பணியாற்றி வருகிறார்.
 

http://onelink.to/nknapp


ஆனால் எதிர்கட்சி தலைவர் அம்மா உணவகத்தில் சாப்பாடு வழங்குவதைக் கொச்சைப்படுத்தி வருகிறார். அம்மா கொண்டு வந்த உன்னதமான திட்டம் ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் அம்மா உணவகம். அந்தந்த பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகத்தை மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ, அமைச்சர்கள் பொறுப்பேற்று இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். இதைக் கேலி பேசுவது ஸ்டாலின் வேலையாக உள்ளது என்று பேசியுள்ளார். 



 

சார்ந்த செய்திகள்