இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்தும் விதமாக ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்கின்றனர். இதற்காக அமெரிக்காவிலிருந்து தனி விமானத்தில் இந்தியா புறப்பட்ட ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர் நேற்று அகமதாபாத் வந்தடைந்தனர். பிரதமர் மோடி அவர்களை வரவேற்றார். பாரம்பரிய கலைஞர்கள் சார்பில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுவருகிறது. பின்னர் சபர்மதி ஆசிரமம் சென்று ட்ரம்ப் மற்றும் மெலனியா பார்வையிட்டனர். பின்னர் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் சச்சின், விராட் கோலி போன்ற கிரிக்கெட் வீரர்களால் நீங்கள் உற்சாகமடைகிறீா்கள். இந்தியாவின் பாதுகாப்புத்துறைக்கு நவீன ஆயுதங்களை வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
முதல்ல கவுன்சிலர் MLA இதெல்லாம் ஜெயிச்சிட்டு அப்புறம் டிரம்புக்கு கண்டிஷன் போடலாம். நீங்க சீமானோட பெரிய அப்பா டக்கரா. pic.twitter.com/fYZrJdtVR3
— S.VE.SHEKHER?? (@SVESHEKHER) February 22, 2020
இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் இந்தியா வருகை அமெரிக்கா தேர்தல் பிரச்சாரமாக இருக்க கூடாது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்து இருந்தது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்த கருத்துக்கு நடிகரும், அரசியல்வாதியுமான பாஜகவின் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், முதல்ல கவுன்சிலர் MLA இதெல்லாம் ஜெயிச்சிட்டு அப்புறம் டிரம்புக்கு கண்டிஷன் போடலாம். நீங்க சீமானோட பெரிய அப்பா டக்கரா என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். எஸ்.வி.சேகரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் உட்பட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.