சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் தற்போது கணிசமான அளவுக்கு பெண்களையும் வேலைக்கு எடுத்துக் கொள்கின்றன. குறிப்பாக குடும்ப வாழ்க்கையில் கஷ்டப்படும் பெண்களுக்கு உணவு டெலிவரி செய்யும் வாய்ப்பை அந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இவ்வாறு உணவு டெலிவரி செய்யும் பெண்களின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி நெகிழ்ச்சியையும், அதிர்ச்சியையும் ஒருங்கே ஏற்படுத்தும். அந்தவகையில் குழந்தையுடன் சென்று உணவு டெலிவரி செய்யும் பெண்ணின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
டிவிஎஸ் 50 வண்டியில் பெண் ஒருவர் தன் குழந்தையை தன்னுடன் சேர்த்து கட்டிக்கொண்டு உணவு எடுத்து செல்வது போன்ற புகைப்படம், நெட்டிசன்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உண்மையான சிங்கப்பெண் இவர்தான் என்றும், வாழ்க்கையில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறார் என்றும் நெட்டின்சன்கள் அவரை பாராட்டி வருகின்றனர். எனினும் மறுபுறம் அவர் ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டுவது ஆபத்தானது என்றும், யாராவது பார்த்தால் அவரை ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டிச் செல்லுமாறு கூறுங்கள் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.