Published on 09/02/2019 | Edited on 09/02/2019

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சையை முடித்துக்கொண்டு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி இன்று இந்தியா திரும்பியுள்ளார். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள அவர் உயர் சிகிச்சைக்காக கடந்த மாதம் 15 ஆம் தேதி அமெரிக்கா சென்றார். இதன் காரணமாக மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அருண் ஜெட்லி வகித்த நிதியமைச்சர் பொறுப்பு அப்போது பியூஸ் கோயலுக்கு வழங்கப்பட்டது. அவரே மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி 3 வார சிகிச்சைக்கு பின் தற்போது மீண்டும் இந்தியா திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.