உத்தரப்பிரதேச மாநிலத்தின் புலம்பெயர் தொழிலாளர்கள், தினக்கூலிகள் உள்ளிட்டோருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர ஆணையம் ஒன்றை அமைக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், இந்தத் திடீர் முடக்கத்தால் இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலையோ, வருமானமோ இல்லாத நிலையில், அவர்கள் தங்களது சொந்த ஊர்களை நோக்கிப் பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே செல்லும் சூழலும் நிலவி வருகிறது. இந்நிலையில் அதிகளவு புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேச மாநிலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள், தினக்கூலிகள் உள்ளிட்டோருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர ஆணையம் ஒன்றை அமைக்குமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.