Published on 17/07/2019 | Edited on 17/07/2019
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மஹாராஜ் கஞ்ச் மாவட்டத்தில் 1999-ம் ஆண்டு போலீஸ் கான்ஸ்டபிள் சத்ய பிரகாஷ் யாதவ் கொல்லப்பட்ட வழக்கில் தற்போதைய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
1999 ஆம் ஆண்டு இந்த வழக்கு பதியப்பட்ட போது, யோகி ஆதித்யநாத் கோரக்பூர் எம்.பி.யாக இருந்தார். நீண்டகாலமாக விசாரிக்கப்பட்டு கிடப்பில் கிடந்த இந்த வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு மாவட்ட நீதிமன்றம் யோகி ஆதித்யநாத்தை வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பு வழங்கியது.எம்.பி, எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.