Published on 25/06/2018 | Edited on 25/06/2018
ஒரிசாவில் ஆசிரியர் ஒருவர் தனது திருமணத்திற்கு வரதட்சனையாக ஆயிரம் மரக்கன்றுகளைக் கேட்டுப் பெற்றிருக்கிறார். எந்த வடிவத்திலும் வரதட்சனையை எதிர்ப்பதாக கூறிய அவர் மரம் நமது நண்பர் என்ற தனது இயக்கத்தின் விழிப்புணர்வுக்காகவே இதைச் செய்ததாக கூறினார்.
முதலில் பெண் வீட்டார் தயங்கியதாகவும், பின்னர் மணமகள் விருப்பப்படி மரக்கன்றுகளைத் தர ஒப்புக்கொண்டனர். திருமணத்தன்று ஒரு லாரியில் ஆயிரம் பழக்கன்றுகளை கொண்டுவந்து ஒப்படைத்தனர். அந்தக் கன்றுகளை திருமணத்திற்கு வந்தவர்களுக்கும், கிராமத்தினருக்கும் கொடுத்தார்கள்.