லட்ச கணக்கில் செலவு செய்து பிரம்மாண்டமாக திருமணம் நடந்த நிலையில் லட்சக்கணக்கில் வரதட்சணையும் வாங்கிக்கொண்ட மென் பொறியாளர் ஒருவர் கட்டிய மனைவியை தவிக்க விட்டுவிட்டு தன்னுடன் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணுடன் ஏற்பட்ட ரகசிய காதலால் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருவரும் கள்ள உறவில் ஈடுபட்டு கொண்டிருக்க, மின்பொறியாளரை கையும் களவுமாக பிடித்த மனைவி கணவனையும், அந்த இளம் பெண்ணையும் சரமாரியாக காலணியால் கவனித்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில், கொட்டகொம்புகூடம் பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளர் லட்சுமணன். இவருக்கும் சுஜன்யா என்ற பெண்ணுக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பு லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்தநிலையில் மின் பொறியாளரான லட்சுமணன் தனது அலுவலகத்தில் பணியாற்றும் இளம் மென் பொறியாளரான அனுஷா என்ற பெண்ணுடன் ரகசியகாதல் வைத்து வந்துள்ளான். இந்நிலையில் மென் பொறியாளரான கணவர் லட்சுமணன் காணாமல் போக கணவனைத் தேடி அலைந்துள்ளார் மனைவி சுஜன்யா.


இந்நிலையில் லட்சுமணனும் அவரது அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு பெண்ணும் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பதாக தெரிய வர அந்த குடியிருப்புக்கு தனது உறவினர்களுடன் ரகசியமாக சென்ற சுஜன்யா லேசாக கதவை தட்டியுள்ளார். அப்பொழுது கதவை தட்டுவது தன்னுடைய மனைவி தான் என்று அறியாமல் கதவைத் திறந்த கணவன் லட்சுமணனை பார்த்த உடனேயே வெறி கொண்ட வேங்கையாக அடித்து துவம்சம் செய்து உள்ளார் மனைவி சுஜன்யா.


அதேபோல் அவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட அனிஷா என்ற பெண்ணையும் சரமாரியாக முடியைப் பிடித்து வளைத்து போட்டு அடித்து கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதேபோல் அந்த பெண்ணின் முகத்திலும் காரி முகிழ்ந்துள்ளார்.
உடன் வந்திருந்த பெண்ணின் உறவினர்கள் மாப்பிள்ளையை முண்டா பனியனுடன் வெளியே இழுத்துச் சென்று வயிற்றிலேயே கும்மாங்குத்து வைத்தனர். அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு அறையில் நடந்த இந்த வெறிகொண்ட தாக்குதல் இறுதியில் நடு வீதிக்கு வந்தது. அதனையடுத்து கள்ளக்காதலில் ஈடுபட்ட இருவரையும் நடு வீதிக்கு அழைத்து வந்த மனைவி சுஜன்யா அந்தப் பெண்ணை நடுத்தெருவில் நிற்க வைத்து காலில் அணிந்திருந்த காலணியால் சரமாரியாக தாக்கி அவருடைய முகத்தில் காரி எச்சில் முகிழ்ந்து கண்டித்தார்.


அதேபோல் அந்த பெண்ணின் உறவினர் ஒருவர் மாப்பிள்ளையை சரமாரியாக அடித்ததில் நிலைதடுமாறிய லட்சுமணன் கீழே விழ அவருக்கு அருகே சென்ற மனைவி இவையெல்லாம் உனக்கு தேவையா என்பது போல எச்சரித்தார். கள்ளக்காதலில் ஈடுபட்டு கையும் களவுமாகச் சிக்கிய கள்ளக் காதல் ஜோடிக்கு மனைவி கொடுத்த சரவெடி கச்சேரி அப்பகுதியில் தெருவில் நின்ற அனைவரின் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.