கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. கடவுளின் தேசம் என்று சொல்லப்பட்ட கேரள தேசம் நீரால் சூழப்பட்டது. மலைகளில் இருக்கும் மண் சரிந்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரையில் 400க்கும் மேற்பட்டவர்கள் பலி ஆகியுள்ளனர். 19,000கோடி வரையிலான நஷ்டம், சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சுமார் 7 லட்சம்பேர் வீட்டை விட்டு வெளியேறி மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்படும் அளவிற்கு கேரளாவின் நிலை மாறியது.
இந்நிலையில் அங்கு கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. அதேபோல் கேரளாவிலுள்ள பிரசித்தி பெற்ற கோவிலான ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் வழிகள் சேதமடைந்ததாலும் பம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருகினாலும் கோவிலுக்கு பக்தர்கள் வரவேண்டாம் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பம்பை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மறு அறிவிப்பு வரும்வரை பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வரவேண்டாம் என தேவஸ்தான போர்டு அறிவித்துள்ளது.