
உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் வசித்து வருபவர் விஷால் யாதவ். பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இவருக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த 6ஆம் தேதி தானா மல்புராவில் இருந்து அஜிஸ்பூருக்கு திருமண ஊர்வலம் நடைபெற்று வந்துள்ளது.
மணமகன் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர் ஒருவர் காரில், அந்த ஊர்வலத்தை பின்தொடர்ந்து வந்துள்ளார். அப்போது வழி மாறி போன அந்த கார், ஹாரன் அடித்து வந்துள்ளார். இதனால் உள்ளூர் இளைஞர் ஒருவர், அந்த உறவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றிய நிலையில், ஆயுதங்கள் மற்றும் தடிகளுடன் ஆயுதம் ஏந்திய ஒரு கும்பல் திருமண ஊர்வலத்திற்குள் வந்து தாக்குதல் நடத்தியது.
திருமணத்தை நிறுத்தி, சாதி அடிப்படையிலான அவதூறு வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும், மணமகன் விஷால் ஜாதவ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதை தடுக்க முயன்ற மணமகனின் தந்தை மீது துப்பாக்கியால் அடித்துள்ளனர். இதையடுத்து, திருமண அலங்காரங்களை சேதப்படுத்தியுள்ளனர். மணமகன் விஷால் ஜாதவை குதிரையில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கி, அவரை நடக்க வைத்துள்ளனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து போலீசார், அங்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பின், இசைக்குழு மற்றும் இசை இல்லாமல் மீதமுள்ள திருமண சடங்குகள் முடிந்தது.