Skip to main content

அனைத்து எம்.பிக்களுக்கும் ஊதியத்தில் 30% குறைப்பு- மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்!

Published on 06/04/2020 | Edited on 06/04/2020

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், காணொளி காட்சி மூலம் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

UNION CABINET DECISION ANNOUNCED UNION MINISTER PRESS MEET

மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "கரோனா எதிரொலியாக பிரதமர் உட்பட அனைத்து எம்.பிக்களின் ஊதியத்தில் 30% குறைக்கப்படும். குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், ஆளுநர்கள் ஊதியத்திலும் 30% குறைக்கப்படும். எம்.பி.களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியும் இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தம் செய்யப்படுகிறது. ஓய்வூதியம் பெறும் முன்னாள் எம்.பி.களின் சம்பளத்திலும் பிடிக்கப்படும். ஊதிய குறைப்பால் சேமிக்கப்படும் நிதி கரோனா நிவாரண நிதியில் சேர்க்கப்படும். ஊதியக்குறைப்பு, தொகுதி மேம்பட்டு நிதி மூலம் ரூபாய் 7,900 கோடி சேமிக்கப்படும். 30% ஊதியக்குறைப்பு ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் ஓராண்டுக்கு அமலில் இருக்கும்". இவ்வாறு தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்