Published on 27/04/2022 | Edited on 27/04/2022
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
ராஜீவ்காந்தி கொலைக்குற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் எனக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நாகேஷ்வரராவ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின்போது ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யக்கூடாது என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். மேலும், பேரறிவாளனை யார் விடுதலை செய்யவேண்டும் என்பதில் உள்ள சிக்கல்களில் அவர் ஏன் சிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.