Published on 22/09/2019 | Edited on 22/09/2019
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான கரும்பு விவசாயிகள் கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்கக்கோரியும், விவசாயக் கடன்களை தள்ளுபடிசெய்யக் கோரியும், மின்சார கட்டணத்தை குறைக்கக் கோரியும் டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காக கிஸான் கோட் நோக்கி வந்தார்கள்.
அவர்களை டெல்லி எல்லையிலேயே தடுத்து நிறுத்தியிருக்கிறது பாஜக அரசு. அவர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து போராடவும், பேசவும் மத்திய அரசு தடை விதிப்பது ஏன்? விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதாக பிரச்சாரம் செய்த பாஜக, விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளை பேசவே தடைவிதிப்பது சரியா? என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.