வாட்ஸ் ஆப்பின் அடுத்த அப்டேட்டில் பணப்பரிமாற்ற வசதி!
சமூக வலைதளங்களில் மிகப்பெரும்பான்மையான வாடிக்கையாளர்களைக் கொண்ட வாட்ஸ் ஆப்பில் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப் படவுள்ளது.
200 மில்லியன் மாதாந்திர வாடிக்கையாளர்களைக் கொண்ட வாட்ஸ் ஆப்பில் யூபிஐ எனப்படும் பணப்பரிமாற்ற வசதி அறிமுகப்படுத்தப் படவுள்ளது. இந்த வசதி வாட்ஸ் ஆப்பின் அடுத்த அப்டேட்டான 2.17.295 முதல் கிடைக்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பணப்பரிமாற்றத்திற்கான பிரத்யேகமான செயலியை வெளியிடவும் வாட்ஸ் ஆப் முடிவு செய்துள்ளது. இதற்கான வேலைகள் இன்னமும் நடந்து கொண்டிருப்பதால், இதுகுறித்து கூடுதல் தகவல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது.
யூபிஐ எனப்படும் பணப்பரிமாற்ற வசதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப் பட்டபோது ஒரு மில்லியன் பயன்பாட்டாளர்கள் இருந்தனர். வெறும் 11 மாதங்களில் இந்த எண்ணிக்கை 10 மில்லியனாக மாறியுள்ளது.
யூபிஐ அறிமுகமானபோது 21 வங்கிகள் அதில் பயன்பாட்டில் இருந்தன. தற்போது 50-க்கும் மேற்பட்ட வங்கிகளின் சேவையை அதில் பயன்படுத்தலாம். யூபிஐ எனப்படுவது சுலபமான பணப்பரிவர்த்தனை முறைக்கான தளம். தற்போதைய சூழலில் 22% பணப்பரிவர்த்தனை யூபிஐ வழியாக நடப்பது குறிப்பிடத்தக்கது.
- ச.ப.மதிவாணன்