இந்திய வங்கிகளில் 9000 கொடிக்கும்மேல் கடன்வாங்கி அவற்றை திரும்ப செலுத்தமுடியமல் லண்டனுக்கு தப்பி சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பிரிட்டன் சொத்துக்கள் முடக்கி பறிமுதல் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் இந்திய அரசால் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அண்மையில் இந்திய கடன் மீட்பு தீர்பாணையம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி பைரன், பிரிட்டனிலுள்ள மல்லையாவின் சொத்துக்களை ஆய்வு செய்யவும் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து லண்டனுக்கு அருகிலுள்ள ஹேர்ட்போர்டுஷர் பகுதியிலுள்ள விஜய் மல்லையாவிற்கு சொந்தமான வீடுகள் மற்றும் விடுதிகள் ஆகியற்றை அமலாக்க துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பறிமுதல் செய்ய நடவடிக்கைகள் எடுத்துவருகின்றனர்.
கழுத்தை நெருக்கும் இந்த நடவடிக்கையில் சிக்கிக்கொண்ட மல்லையா தற்போது எனது சொத்துக்களை தர தயார் ஆனால் லண்டனில் உள்ள சொத்துக்கள் என்னுடையது அல்ல என் தயார் மற்றும் என் குழந்தைகளினுடையது. என்னடைய பெயரில் சில கார்களும் நகைகளும்தான் உள்ளது என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்தியாவை பொறுத்தவரை நான் ஒரு வெளிநாட்டுவாழ் இந்தியன் என்றும் இந்தியாவில் நற்பெயரை வாங்கி ஓட்டுகள் வாங்கி ஆட்சியை பிடிக்க என்னை சிலுவையில் ஏற்ற பார்க்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.